கர்நாடகா மாநிலம் பெங்களூர் லே அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் முதியவர் ஒருவர் பூட்டிய வீட்டில் இருந்து வெளியே செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது.
அதன்பின் அந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கைதான முதியவர் பெயர் ரமேஷ் ஆகும். இவருக்கு முன்பே 2 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. அதன்பின் 3-வதாக இளம் பெண் ஒருவரை திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை அறிந்த அவரது மனைவிகள் முதியவரை வீட்டை விட்டு துரத்தி உள்ளனர்.
இதனால் சொகுசாக வாழ ஆசைப்பட்டுப் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நகை மற்றும் பணத்தை திருடி வந்துள்ளார். இவ்வாறு திருடிய பணத்தில் முதியவர், பெண்களுடன் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தமிழகத்திலும் முதியவர் இதுபோன்று கொள்ளை அடித்து வந்துள்ளார் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகவே இதுபோன்று பெங்களூருவில் கொள்ளையடித்து வந்த நிலையில் காவல்துறையினரிடம் முதியவர் சிக்கியுள்ளார்.