உலகம் முழுவதும் பிரபல குறுந்தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் வாட்ஸ்அப், பயனர்களுக்கு புதுப்புது அம்சங்களில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வீடியோ கால், ஆடியோ கால், வாய்ஸ் மெசேஜ் போன்ற பல அம்சங்கள் வாட்ஸ் அப்பில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பில் போலிங் வசதியும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த அம்சம் குரூப் சாட்டில் இடம்பெறும். குரூப்பில் உள்ள நபர்கள் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கலாம் எனவும் அதன் முடிவுகளும் குரூப்பில் காட்டப்படும் என தெரிவித்துள்ளது.இதன் மூலமாக குரூப் சாட்டில் இருப்பவர்கள் தற்காலிகமாக ஒரு போலிங் உருவாக்கி அதன் மூலம் உறுப்பினர்களை வாக்களிக்க செய்யலாம். ஏற்கனவே இந்த வசதி ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்தாலும் இதுவரை வாட்ஸ் அப்பில் அறியப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப்பிலும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.