Categories
அரசியல்

இபிஎஸ்-ஓபிஎஸ் ரெண்டு பெரும்…. அதிமுகவின் பாதுகாப்பு கவசங்கள்…. சொல்கிறார் மாஜி அமைச்சர்…!!!

அதிமுகவில் சசிகலாவை மற்றும் டிடிவி தினகரனை இணைப்பது தொடர்பாக தேனி மாவட்டத்திலுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூடி முடிவு எடுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் இதில் ஓ. பன்னீர்செல்வம் தலையிடவில்லை எனவும் கூறப்பட்டது. ஒருவேளை ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு ஆதரவாக பேசியிருந்தால் ஓபிஎஸ் பக்கம் ஏதேனும் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளும் உள்ளனரா.? என்று பார்த்தால் ஒருவர் கூட இல்லை என்பது தான் நிதர்சனம். இந்நிலையில் ஆர்.பி உதயகுமார் ஓ. பன்னீர் செல்வத்தை கைலாசபட்டி பண்ணை வீட்டில் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆர்.பி உதயகுமார் இது குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “அதிமுக தமிழகத்தின் பிரதான கட்சியாக இருந்து வருகிறது. அதனை ஒழித்துக்கட்ட தற்போது சதி வேலைகள் நடந்து வருகின்றன. ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக உள்ளன. தமிழக வரலாற்றில் சுமாராக 7 முறை அதிமுக ஆட்சி செய்துள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாறறாத திமுக அரசு அதிமுகவை குறை கூறுவதற்கு எந்த தகுதியும் அற்றது. வாக்குப் பெட்டியில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு செய்து தான் திமுக வெற்றி பெற்றதோ.? என தோன்றுகிறது. கடமை ,கண்ணியம், கட்டுப்பாடு என அண்ணா கற்றுக் கொடுத்த வழியில் செல்கிறார்கள் இபிஎஸ் ஓபிஎஸ் விரைவில் கட்சியை பழைய நிலைக்குக் கொண்டு வருவார்கள் என்று நம்பிக்கை மக்களுக்கும் தொண்டர்களுக்கும் உள்ளது.” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |