உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஸியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது இல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் 700 இந்தியர்கள் சிக்கியுள்ள சுமி நகரில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சுமி நகரில் நடந்த குண்டுவீச்சில் 9 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து குண்டுகள் வீசி தாக்கப்பட்டு உள்ள சுமியில் உள்ள இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.