Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….! “மைசூர் மகாராஜாவால் பரிசளிக்க பட்ட ‘நடுங்கமுவே ராஜா’ இறப்பு”…. சோகத்தில் பிரபல நாடு….!!!

இலங்கையில் மைசூர் மகாராஜாவால் பரிசளிக்க பட்ட யானை முதுமை காரணமாக உயிரிழந்து விட்டது. 

இலங்கைக்கு மைசூர் மகாராஜாவால் ‘நடுங்கமுவே ராஜா’ என்ற யானை பரிசாக வழங்கப்பட்டது. இந்த யானை இலங்கையிலே புகழ்பெற்ற வி.ஐ.பி யானை என்ற அந்தஸ்தில் உலா வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த யானை கண்டி என்னும் கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருவிழாவில் கடந்த 11 ஆண்டுகளாக புத்தரின் புனிதப் பல் அடங்கிய பேழையை சுமக்கும் கவுரவத்தை பெற்று வருகிறது.

இதற்கிடையில் ‘நடுங்கமுவே ராஜா’ 10.5 அடி உயரத்தில் ஆசியாவிலேயே பெரிய யானையாக கம்பீரமாக திகழ்ந்து வந்தது. இந்த நிலையில்  69 வயது எட்டியதால் நேற்று இந்த யானை முதுமை காரணமாக உயிரிழந்து விட்டது. இதனால் இலங்கையே சோகத்தில் ஆழ்த்திருக்கிறது.  இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேயும் ‘நடுங்கமுவே ராஜா’ யானை இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் இந்த யானையின் உடலை வருங்கால தலைமுறையினர் அறியும் வகையில் தேசிய பொக்கிஷமாக பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |