Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தை அளந்துட்டேன்… சான்றிதலுக்கு ரூ 6,000 கொடு…. கொடுக்கப்பட்ட புகார்… நில அளவையரை தூக்கிய போலீஸ்…!!

பந்தலூர் அருகே ரூ 6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை  லஞ்ச ஒழிப்புத் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் பழனி சாமி என்பவர் குறுவட்ட நில அளவையராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன் எருமாடு அருகில் மூனநாடு ஈரானி பகுதியில் வசித்து வந்த விவசாயி வாசுதேவன் என்பவர் தன்னுடைய சொந்த நிலத்தை அளவீடு செய்ய பழனிசாமிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளார். இதையடுத்து பழனிசாமி நிலத்தை  அளந்துவிட்டு அதற்கான சான்றிதழை வழங்க ரூ 6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து  லஞ்சம் கொடுக்க விரும்பாத வாசுதேவன்  லஞ்சம் ஒழிப்பு துறையினர்க்கு புகார் அளித்துள்ளார்.

அதன்பின் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று மாலை வாசுதேவனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து பழனிச்சாமியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்கள். உடனே வாசுதேவன் பந்தலூர் அருகில் இருக்கின்ற அரசு ஊழியர் குடியீருப்பில் தங்கி இருக்கும் பழனிசாமியை நேரில் சந்தித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் கொடுத்த ரூபாயை அவரிடம் கொடுத்துள்ளார். அதை பழனிசாமி வாங்கும்போது ஒளிந்திருந்த  இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் கையும் களவுமாக அவரை கைது செய்ய முயன்றபோது அவர் தப்பித்து ஓடினார். பின் அவரை மடக்கிப்பிடித்து கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |