தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் 27 மாநகராட்சிகளில், மேயர்கள் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பெண்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தேர்ந்தெடுக்கப்பட்ட 11 பெண் மேயர்களும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.இந்நிலையில் இந்தியாவிலேயே பெண் மேயர்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் தான் என மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.