Categories
தேசிய செய்திகள்

“மகளிர் தினத்தை முன்னிட்டு”…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு டூடுல்….!!!!!

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச்.8) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது தேடுதல் ஜாம்பவானான கூகுள்தளம் இன்று சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பு டூடுலுடன் கொண்டாடுகிறது. இந்த டூடுல் பெண்கள் பல துறைகளில் முன்னேறி உள்ளதை குறிப்பிடும் அடிப்படையில் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு அனிமேஷன் விடியோவில் பெண்கள் சமூகத்தில் அவர்களின் பல பங்களிப்பை விவரிக்கும் வகையில் இருக்கிறது.

மகளிர் தினத்தின் வரலாற்றுப் பின்னணி அதன் முக்கியத்துவம் போன்றவை அதில் விளக்கப்பட்டுள்ளது. இதனிடையில் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் தாய் முதல் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் வரை தனது திறமைகளை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் அடிப்படையில் இன்றைய டூடுலில் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விளக்கப்படமும், பெண்கள் தனக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும், தங்கள் சமூகத்திற்காகவும் எப்படிப் பாடுபடுகிறாள் என்ற பொதுவான கருத்தைத் தெரிவிக்கும் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் என்று கூகுள் தனது டூடுல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Categories

Tech |