Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 209 தொகுதிகளில் விளையாட்டு மைதானங்கள்…. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…..!!!

தமிழக சுற்றுச்சூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின் திருச்செந்தூர் ஜீவாநகர் பகுதியில் உள்ள செந்தில்முருகன்  பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஒதுக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளரிடம் அவர் கூறியுள்ளதாவது, முதற்கட்டமாக மாவட்ட வாரியாக உள் விளையாட்டு அரங்கத்துடன் கூடிய விளையாட்டு மைதானத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 209 தொகுதிகளில் தலா  ரூ.3 கோடி செலவில் விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான, முதற்கட்ட பணிகள் நடந்தது வருவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |