Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசி கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பள்ளத்தில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் காயத்ரி நாயக்கர் ராமசாமி தெருவில் கோடீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோடீஸ்வரன் காட்டூர் ஐஸ்வர்யம் நகரில் இருக்கும் தனியார் கம்பெனியில் ஜன்னல்களுக்கு கிரில் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்ற கோடீஸ்வரன் 2-வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக லிப்ட்டுக்காக அமைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார்.

இதனால் படுகாயம் அடைந்த கோடீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோடீஸ்வரனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |