தந்தை மகன் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியில் கங்காதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஞானம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கங்காதரனின் வீட்டு கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது மகள் சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தந்தையும் தனது அண்ணனை தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் சடலங்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் கங்காதரனின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து கங்காதரன் இருதய நோயாலும், ஞானம் சிறுநீரக கோளாறாலும் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தங்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம் என இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.