தென்னை மரம் முறிந்து விழுந்ததால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவியம்பாளையம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பழைய சோதனை சாவடி அருகில் இருக்கும் தனியார் குவாரியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு விஜயகுமார் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் சொக்கனூர்-வீரப்பகவுண்டனூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த தென்னை மரம் முறிந்து விஜயகுமாரின் இருசக்கர வாகனம் மீது விழுந்துவிட்டது. இதனால் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.