மூச்சுத் திணறல் ஏற்பட்டு தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் தொழிலாளியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகம் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்த சண்முகத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.