Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை….. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை..!!

வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெங்கிநாயக்கம்பட்டி பகுதியில் வேன் டிரைவரான ஆறுமுகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகத்திற்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஆறுமுகம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆறுமுகத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |