காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரியூர் கிராமத்தில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் பிரசாந்த் என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்துகொண்ட சூர்யாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடந்த 2-ஆம் தேதி சூர்யா மற்றும் பிரஷாந்த் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்னையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்துள்ளனர். இதனையறிந்த சூர்யாவின் பெற்றோர் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். எனவே சூர்யா மற்றும் பிரஷாந்த் ஆகிய இருவரும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு தருமாறு தஞ்சம் அடைந்துள்ளனர்.