மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவில் விஜி என்பவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் 17 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இந்நிலையில் விஜி வீட்டில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.