Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு லாரி பழுது….நாடுகாணி சோதனை சாவடி பகுதியில்… போக்குவரத்து பாதிப்பு…!!

நாடுகாணி சோதனை சாவடி அருகில் நடு சாலையில் சரக்கு லாரி பழுதுடைந்து  நின்றது.

கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கும் கூடலூர் பாதையாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் லாரியில் ஏற்றப்பட்டு தினந்தோறும் கொண்டு சேர்க்கப் படுகின்றன. இந்த இரு மாநிலத்தையும்  இணைக்கும்  பகுதியாகக் கூடலூர் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு கேரளாவில் இருந்து மைசூருக்கு செல்ல கூடிய சரக்கு லாரி கூடலூர் வழியாக பிளைவுட் ஏற்றிக்கொண்டு வந்தபோது நாடுகாணி நுழைவு சோதனை சாவடி அருகில் வரும்போது எதிர்பாராத விதமாக  பழுது அடைந்து நின்றுவிட்டது.

இதனால் அப்பகுதியில் வண்டிகள்  போகமுடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் ஓட்டுனர் பழுதடைந்த லாரியை சாலையோரம் நிறுத்தி வைப்பதற்கு முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை இதனால் சைக்கிள்,பைக் என சிறிய வாகனங்கள் மட்டும் ஒரு வழியாக போக முடிந்தது. கார், பஸ் வாகனங்கள் போக வழியில்லை. பின் இன்னொரு லாரி வரவழைத்து பிளைவுட் மாற்றப்பட்டு பழுதடைந்த லாரியை சாலை ஓரத்திற்கு இழுத்துச் சென்று  போக்குவரத்தை சரி செய்தனர்.

Categories

Tech |