முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூர் அருகில் இருக்கும் கறிவேப்பிலையாபுரம் கிராமம் முன்னால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் ஊராட்சியாக அறிவிக்கப்பட்டது. இந்த கிராமத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழா கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவின் போது மீட்புக் குழு இளைஞர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் மேளதாளம் முழங்க முன்னால் முதலமைச்சரை வரவேற்றனர். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார். இந்த விழாவில் நகர செயலாளர் காண்டீபன், அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் ஏகாம்பரம், ராமலிங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.