Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: நாடு முழுவதும் மாவட்டந்தோறும்…. பிரதமர் மோடி சொன்ன குட் நியூஸ்…!!!!

நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று மக்கள் மருந்தகம் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக  மக்கள் மருந்தகங்கள் பயனர்களோடு உரையாற்றினார். அப்போது ஏழை மக்களின் மருத்துவச் செலவைக் குறைப்பதற்காக இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட்டன என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எதிர்கால சவால்களை மனதில் கொண்டும் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அரசு தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது.

அதற்காக நாடு முழுவதும் மாவட்டந்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். நாடு சுதந்திரம் பெற்ற உடனே ஒரே ஒரு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இருந்தது. தற்போது 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிக்கு நிகரான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பேசியுள்ளார்.

Categories

Tech |