புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சரான சந்திர பிரியங்கா அம்மன் வேடம் அணிந்து அருள்பாலிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். மகளிர் தினமான நேற்று அவர் அம்மன் அவதாரத்தில் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுளார். அமைச்சர் சந்திர பிரியங்காவை ஆரத்தியெடுத்து பெண்கள் வரவேற்றுள்ளனர். இதையடுத்து அவருக்கு மேக்கப் செய்து அம்மன் போன்று அலங்கரித்துள்ளனர். அதன்பின் அமைச்சர் சந்திர பிரியங்காஅம்மன் போன்று அமர்ந்து அருள்பாலித்துள்ளார். அப்போது அவருக்கு சூடம் காட்டி பெண்கள் வணங்குகிறார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காரைக்காலை சேர்ந்தவர் சந்திர பிரியங்காவின் தந்தை சந்திரகாசு ஆவார். இதில் சந்திரகாசு காரைக்கால் மாவட்டத்திலுள்ள நெடுங்காடு தனி தொகுதியில் போட்டியிட்டு 6 முறை வெற்றி பெற்று துணை சபாநாயகர், சபாநாயகர், அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தவர் ஆவார். இதனால் அந்த செல்வாக்கில் 26 வயதில் புதுவை மாநிலத்தின் இளம் எம்எல்ஏவாக சந்திர பிரியங்கா ஆனார். அதன்பின் 31 வயதில் சந்திர பிரியங்கா அமைச்சரானார். புதுவை மாநிலத்தில் 40 வருடங்களுக்கு பின், பெண் ஒருவர் அமைச்சரானார் என்ற பெருமையைச் சந்திர பிரியங்கா சேர்த்துள்ளார்.
என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வென்ற சந்திர பிரியங்கா ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை, ஆதிதிராவிடர் நலம், வீட்டு வசதி, தொழிலாளர் நலம், வேலைவாய்ப்பு ,கலை, பண்பாடு ,பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். கடந்த பிப்..மாதம் முதல் வாரத்தில் சந்திர பிரியங்கா அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் அவர் அம்மன் அலங்காரத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
https://twitter.com/i/status/1501099377208999940