Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வசமாக சிக்கிய 5 பேர் …. போலீஸ் விசாரணை ….!!

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாபட்டி கிராமத்தில் தர்மராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை  பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அங்க தகவலின்படி சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மல்லிகா மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

அந்த விசாரணையில் தர்மராஜ் சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்த தர்மராஜ் அவரது பெற்றோர் ராமச்சந்திரன், புதுமாடத்தி, சிறுமியின் பெற்றோர் கண்ணன், மகேஸ்வரி ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |