ரஷ்யப்படை கைவிட்டுச்சென்ற ராணுவ டாங்கி மீது உக்ரைன் மக்கள் சிறுநீர் கழிக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. அந்நாட்டின் பல நபர்களை ஆக்கிரமித்த ரஷ்யப்படை தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. எனவே, உக்ரைன் படைகள் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இரு படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் உக்ரைன் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், சில பகுதிகளில் ரஷ்ய படையினர் தங்கள் ராணுவ வாகனங்களை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.
அதன்படி, உக்ரைன் நாட்டின் கக்ஹொவா என்னும் மாகாணத்தில் இருக்கும் என்ற சப்லெஹா நகரத்தில் ரஷ்யப்படையினரின் ராணுவ டாங்கி நின்றது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அந்த ராணுவ டாங்கி மீது சிறுநீர் கழித்திருக்கிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், அந்த ராணுவ டாங்கி மேல் உக்ரைன் நாட்டின் கொடியை ஏற்றியிருக்கிறார்கள்.