பள்ளி, கல்லுரி முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொரோன தொற்றின் காரணமாக கடந்த 2 வருடங்களாக இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த பெண்களுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்த பெண்களுக்கும் சேர்த்து தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வழங்கப்பட்டது. இதில் திருவண்ணாமலை, துரிஞ்சாபுரம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குடும்பத்தினருடடன் வந்து திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் பணம் வாங்கி சென்றுள்ளனர்.