Categories
உலக செய்திகள்

தனியாக அழுதுகொண்டே நாட்டை கடக்கும் உக்ரைன் சிறுவன்… மனதை நொறுக்கும் வீடியோ…!!!

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு சிறுவன் ஆதரவு இல்லாமல் தனியாக அழுதவாறே போலந்து நாட்டிற்கு சென்ற வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால், அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஸ்லோவாகியா, ஹங்கேரி, போலந்து மற்றும் மால்டோவா போன்ற பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். மேலும், மக்கள் தங்கள் உடமைகள், உறவினர்களை விட்டு ஆதரவின்றி பக்கத்து நாடுகளை அடைகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்களில் ஒரு சிறுவன் யாருமின்றி தனியாக எல்லையை கடந்து போலந்து நாட்டிற்கு சென்றிருக்கிறார். அச்சிறுவன் அழுதவாறு தன் உடமைகளை எடுத்துக் கொண்டு போலந்திற்குள் நுழையும் வீடியோ நெஞ்சை பதற வைக்கிறது. சிறுவனின் குடும்பத்தார் எங்கே இருக்கிறார்கள்? என்பது பற்றிய தகவல் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |