Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் எரிந்து நாசமான பொருட்கள்…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய்  மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் இருக்கும் தேவகோட்டை குடியிருப்பு பகுதியில் ஓய்வு பெற்ற ஆசிரியரான ஆதிமூலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் வில்லிவாக்கம் பகுதிக்கு உறவினர் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில்   திடீரென ஆதிமூலம் வீட்டிலிருந்து புகைமூட்டம் வந்துள்ளது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.

இந்த தகவலை அறிந்த ஆதிமூலம் தனது வீட்டிற்கு விரைந்து  வந்துள்ளார். இதனையடுத்து  வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பிரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின் போன்ற பல்வேறு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயினது. மேலும் 15 பவுன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Categories

Tech |