தனியார் நிறுவன ஊழியர் திடீரென காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.ஆர். நகரில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் நேற்று திடீரென கார்த்திக் வீட்டை விட்டு வெளியேறி மாயமாகிவிட்டார்.
இதனையடுத்து கார்த்திக்கின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கார்த்திக் பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் சகோதரர் சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன கார்த்திக் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.