குடும்ப பிரச்சினையில் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் கோழி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கருணாகரனுக்கும் அவரது மனைவி கலாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காலா தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதனையடுத்து கருணாகரன் கலாவை பல இடங்களில் தேடியுள்ளர். ஆனால் கலா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த கருணாகரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன கலா குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.