Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட செம அறிவிப்பு….!!!

தெற்கு ரயில்வே முன்புபோல் முன்பதிவில்லா பெட்டிகளை இயக்குவதற்கான  உத்தரவை வெளியிட்டுள்ளது.

தெற்கு ரயில்வே 192 ரயில்களில்  இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லா பயணம் செய்யும் திட்டத்தை வருகிற 10ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்படி ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆகவே எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, கட்டாயமாக முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், முன்புபோல அனைத்து ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை இயக்கும்படி, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரயில்களில் இந்த முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியானது  வருகிற  10 ஆம் தேதி முதல் இயக்கப்படும். இதனைத் தொடர்ந்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் மாதம் 1 ஆம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.

இதை அடுத்து ஏப்ரல் 16 ஆம் தேதி முதல், நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம் எனவும் இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும், மொத்தமாக 192 விரைவு ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அறிப்பால் ரயில் பயணிகள் பெரும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |