Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்ததால்…. வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கிணற்றில் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்ற வாலிபர் ஒரு திருமண விழாவில் சப்ளையர் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டம் ஒம்பதாம்பாளிகாடுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து வேலையை முடித்துவிட்டு மாரிமுத்து அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.

இதனைதொடர்ந்து வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி மாரிமுத்துவை தேடியுள்ளார். அதன்பிறகு நீரில் மூழ்கிய மாரிமுத்துவை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆயில்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |