Categories
விருதுநகர்

கள்ளக்காதலுடன் வசித்து வந்த தாய்…. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை …. போலீஸ் விசாரணை….!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் ஆகிய 2 பேரையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் பூமதி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர்  கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பூபதி தனது  மக்களுடன்  அதே பகுதியை சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருடன் சேர்ந்து  வசித்து வருகிறார். இதனால் பாண்டிமுருகன் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாய் பூமதியிடம்  கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்ட தனது மக்களிடம் இது பற்றி  யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து அந்த  சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு செல்போனின் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் ஜானகி மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணைகள் பாண்டிமுருகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தெரியவந்தது. இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  பாண்டிமுருகன் மற்றும் சிறுமியின் தாய் பூமதி ஆகிய 2 பேரையும்  கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |