Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆசை காட்டிய வாலிபர்…. சிறுமிக்கி நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி கிராமத்தில் 16 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கீழஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த சூர்யா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சூர்யா  சிறுமியை  திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சூர்யா அந்த சிறுமியை  தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த சிறுமி  அரும்பு கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சூர்யாவை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |