Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி நகர்ப்புறங்களிலும்…. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!!

ஜல் ஜீவன் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விரைவாக அதை நடைமுறைப்படுத்த மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி கோவா அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மரம் நட்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார்.

பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள்தான் பயன் பெற்று வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் 36% நகர்ப்புறத்தில் மக்கள் வசிக்கிறார்கள் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால் பல திட்டங்களை மத்திய அரச கிராமப்புறத்தில் மையமாக வைத்தே செயல்படுகிறது. ஆனால் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் பயன் பெற முடிவதில்லை. அதனால்தான் தமிழ்நாடு அரசு சார்பில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

தற்போது இந்த திட்டத்திற்கு 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியில் உள்ள ஒரு மண்டலம் 27, பேரூராட்சிகள் 5, நகராட்சிகள் மற்றும் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது. நிலைமைக்கு ஏற்ப விரிவுபடுத்தப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் உள்ள சாலை தூய்மைப்படுத்துதல், மரம் நடுதல், பூங்கா பராமரிப்பு, போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்ச்சிக்கு பின்  செய்தியாளரிடம் பேசிய கே.என் நேரு மத்திய அரசின் செலவில் இத்திட்டம் கிராமப்புறங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.

நகரங்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும் என மத்திய அரசிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளோம். அதனை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்துவோம். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இடையே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இது குறித்தெல்லாம் பேசாமல் பாஜகவினர் தமிழ் நாட்டை பற்றி மட்டும் 24 மணி நேரம் பேசுவது எந்த வகையில் நியாயம் என கூறியுள்ளார்.

Categories

Tech |