ஓமன் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்ற சுல்தான் காபூஸ் நேற்று திடீரென காலமானார்.
40 ஆண்டுகளுக்கு மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் சையத் மரணமடைந்தார். அவருக்கு வயது 79. 1970களில் அவரது தந்தை சையத் பல்கோவை ஆட்சியிலிருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்தார். எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்றவர் காபூஸ். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று பின் நாடு திரும்பினார்.
இந்நிலையில் நேற்று அவர் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த காபூஸ் அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை இதனால் அந்நாட்டு வழக்கப்படி மன்னர் குடும்பத்தை சேர்ந்த 50 பேர் நாளைக்கே கூடி புதிய சுல்தானை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.