Categories
மாநில செய்திகள்

10, 11, 12-ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…. இன்று முதல் 16-ம் தேதி வரை…. மிக முக்கிய அறிவிப்பு…!!!!

10, 11, 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று இணையதளம் மூலமாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி(தட்கல்) முறையில் வருகிற 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையிலும் கூடுதலாக மேல்நிலைப் பொதுத் தேர்வுக்கு ரூ.1000 மும், பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு ரூ.500ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |