ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை அரசு வழங்கியுள்ளது. குடும்ப அட்டைதாரரின் வருமானத்தை பொறுத்து 5 வகைகளாக ( PHH,PHH – AAY, NPHH,NPHH-S,NPHH-NC) ரேஷன் அட்டைகளின் தரநிலை பிரிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தங்களுடைய ரேஷன் அட்டைகளை கொண்டு பொருள்களை வாங்குகின்றனர். மேலும் ரேஷன் அட்டை சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கவும் முக்கிய ஆவணமாக உள்ளது. அதேபோல் முகவரி ஆவணமாகவும் ரேஷன் அட்டையை பயன்படுத்தலாம்.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கும் தகுதி உள்ள நபர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகளை மாற்றம் செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் மாநில அரசுகளுடன் புதிய தர நிலையின் வரைவு குறித்து பல சுற்று கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. எனவே பல்வேறு மாற்றங்கள் புதிய விதியின் அடிப்படையில் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை இந்தியா முழுவதும் 80 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பலர் பொருளாதார ரீதியாக வளமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் முற்றிலும் வெளிப்படையானதாக புதிய தரநிலை மாற்றம் செய்யப்படும். இதனால் மோசடியும், எந்தவித குழப்பமும் இன்றி செயல்முறை வெளிப்படைத் தன்மை உடையதாக இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. புதிய தரநிலை அமலுக்கு வந்தால் ரேஷன் பொருள்களை மலிவு விலையில் பெற தகுதியுடையவர்கள் மட்டுமே பயன் பெறமுடியும். தகுதி இல்லாதவர்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று பயன்பெற முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.