Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…. மின்கட்டணம் 20% வரை உயர போகுது?….. அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் மது வகைகள் மீதான வரியை வருவாய்க்காக டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் விலை 10 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மின் கட்டணமும் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின்வாரிய செயல்பாட்டைக் கண்காணித்தல்,மின் வாரியம் மற்றும் மின் நிறுவனங்கள் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகளை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்திற்குள் மின்வாரியம் தன் வருவாய் தேவை அறிக்கையுடன் மின் கட்டண முறை ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அதன்படி தற்போது மின் கட்டணம் 20 சதவீதம் வரை உயர்த்த படம் இருப்பதாக மின்வாரியம் எடுத்துள்ள முடிவை முறைப்படி ஆணையத்திடம் மனு சமர்ப்பித்து ஆரம்பிக்கலாமா அல்லது ஆணையமே அதிகாரத்தை பயன்படுத்தி உயர்த்த செய்யலாமா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. எனவே மின் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி தரும் தகவலாக அமைந்துள்ளது.

Categories

Tech |