Categories
சினிமா தமிழ் சினிமா

“இது எல்லாத்துக்கும் தனுஷ் தான் காரணம்”…. மாளவிகா மோஹனன் ஓபன் டாக்….!!!

தனுசுடன் மாறன் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து மாளவிகா மோஹனன் மனம் திறந்து பேசியுள்ளார்.

சினிமாவில் பன்முக திறன் கொண்ட நடிகர் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். காதல்கொண்டேன், ஆடுகளம், அசுரன், வடசென்னை ஆகிய படங்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. ஒருபக்கம் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷ் மறுபக்கம் கமர்சியல் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் 2 தேசிய விருது பெற்ற தனுஷ் பாலிவுட் ஹாலிவுட் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது அவர் நடித்து வந்த மாறன் திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் இந்த மாதம் OTT-யில் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. இதை தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் மாளவிகா மோஹனன். அவர் கூறியதாவது: “அவருடன் நடித்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. எனக்கு நடிப்பில் சிறந்த வழிகாட்டியாக நடிகர் தனுஷ் இருந்தார். அவரின் நடிப்பை பார்த்து நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். மாறன் படத்தில் என் நடிப்பு சிறப்பாக அமைந்தது என்றால், அதற்கு முழு காரணம் தனுஷ் மட்டும் தான்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்திலிருந்து தனுஷ் எழுதி பாடிய சிட்டுக்குருவி பாடல் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |