உக்ரைன் நாட்டின் தென் பகுதியிலுள்ள மைகோலைவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பலில் 75 இந்திய மாலுமிகள் சிக்கி தவித்தனர். கடந்த 24-ம் தேதி உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நடைபெற்றதில் இருந்து அவர்கள் அந்த கப்பலை விட்டு வெளியேற முடியாமல் இருந்தனர். இது குறித்து தலைநகர் கீவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வெளியேற தூதரகம் உதவ முன்வந்தது.
அதன்படி முதற்கட்டமாக 57 மாலுமிகளை வெளியேற்ற பேருந்துகளை ஏற்பாடு செய்தது. அவர்களில் லெபனான், சிரியா போன்ற நாடுகளை சேர்ந்த 5 மாலுமிகளும் அடங்குவர். இதனிடையில் பாதையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையால் மீதி 23 இந்திய மாலுமிகளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின் நேற்று அவர்களை வெளியேற்றும் முயற்சியை மேற்கொண்டதாக இந்திய தூதரகம் தெரிவித்தது.