Categories
சினிமா

என் 40 வருஷ சினிமா வாழ்க்கையை அசிங்கப்படுத்திட்டாங்க…. கவலை தெரிவித்த கணேஷ்கர்….!!!!

நடிகர் கணேஷ்கர் கடந்த சனிக்கிழமையன்று இரவு நேரத்தில் பட்டினப்பாக்கம் சாலையில் காரில் போய் கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்து வந்த நபர் காயமடைந்துள்ளார். மேலும் கணேஷ்கர் எதிரேவந்த ஒரு கார் மீது மோதி விட்டார் என தெரிகிறது. இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்தை ஏற்படுத்திய கணேஷ்கர் அங்கிருந்து தப்பியதாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு கணேஷ்கர் பேட்டியளித்தபோது, அங்கே விபத்து நடந்தது உண்மை தான். அதாவது கார் கட்டுப்பாட்டை இழந்ததால் தெரியாமல் விபத்து நேர்ந்து விட்டது. அப்போது நான் குழப்பத்தில் இருந்ததால், என் மனைவி ஆர்த்தி வந்து என்னை அழைத்துச் சென்றுவிட்டார். இதனிடையில் நான் குடித்து விட்டோ, நிதானத்தில் இல்லாமலோ விபத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது அனைத்து பத்திரிகைகளிலும் நான் குடித்துவிட்டு, வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி விட்டதாக எழுதி வருகின்றனர். இந்நிகழ்வு குறித்து பிரபல தொலைக்காட்சியில் பேசும்போது கூட ஆர்த்தி தெளிவாக இருந்தார்.

அப்போது கணேஷ்கர் சற்று சொல்லி கொடுத்து பேச வைத்தது போன்று அவர் பேசிக்கொண்டிருந்தார் என்றும் இவர்கள் மீது தவறு இல்லையெனில் நேராக காவல் நிலையம் சென்றிருக்கலாம் என்றும் விபத்தை பார்த்தவர்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் இப்படி எதுவும் தெரியாமல், எங்களுடைய 40 வருட சினிமா வாழ்க்கையை கேவலப்படுத்தி விட்டனர். இதற்கிடையில் காவல்துறையினரும் நான் ஓடி ஒழிந்து விட்டதாக ஒரு பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். இவ்வாறு செய்வதால் எங்களுடைய சினிமா வாழ்க்கை மட்டுமின்றி, எங்களுடைய மனதும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக தவறான செயலை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பேட்டியளித்தார்.

Categories

Tech |