Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில்… போர்க்களத்தில் சிக்கித்தவிக்கும்…. 4000 வன விலங்குகள்…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவில் இருக்கும் உயிரியல் பூங்காவில் 4000 வனவிலங்குகள் மீட்கப்படாமல் பரிதாப நிலையில் இருக்கின்றன.
உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களால், சுமார் 20 லட்சம் மக்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர். போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. எனவே, ஒவ்வொரு நாளும் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் தங்கள் உயிரை காக்க, தப்பித்து வருகிறார்கள். தலைநகரான கீவ் பகுதியில் இருக்கும்  உயிரியல் பூங்காவில் சுமார் 4000 விலங்குகள் இருக்கின்றன. அவற்றை மீட்க, ஆளின்றி பரிதாபமான நிலையில் தவித்து வருகின்றன. அந்த உயிரியல் பூங்காவில் அந்நாட்டில் இருக்கும் ஒரே ஒரு குரங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து வெடி குண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதால், உண்டாகும் பலத்த சத்தத்தால் விலங்குகள் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கின்றன. எனவே, விலங்குகள் நிலத்தின் அடியில் இருக்கும் கூண்டுகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாக, பூங்கா நிர்வாகம் கூறியிருக்கிறது.

Categories

Tech |