Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே…! திடீரென்று வந்த இரங்கல் செய்தி…. கடும் அதிர்ச்சியில் ரஜினி…!!!!

நடிகர் ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானார். அதன் பிறகு குணச்சித்திர வேடங்கள், வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில் ஹீரோவாகும் எண்ணம் ஒருபோதும் தனக்கு இல்லை என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருந்தார். இருப்பினும் ரஜினியின் நெருங்கிய நண்பரான கமலின் அறிவுரையின்படி அவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். இதனை அடுத்து ரஜினி ஹீரோவாக தமிழ் சினிமாவை கலக்கினார்.

அவருடைய ஸ்டைலுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இதனையடுத்து அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெட்ரா அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் சேர ஆரம்பித்தனர். ஆனால் அவருக்கு முதன் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்தவர் மதுரையை சேர்ந்த ஏ.பி முத்துமணி. இந்நிலையில் ஏ.பி முத்துமணி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார் .மதுரையில் ரஜினிகாந்திற்கு முதன்முதலாக ரசிகர் மன்றம் அமைத்தவர். அவரது பேச்சு, உடல், மொழி என அனைத்தும் ரஜினி போலவே இருக்கும். ரசிகர் காலமானதை  அறிந்த ரஜினி குடும்பத்தினருக்கு தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்தார்.

Categories

Tech |