Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

JUST IN: நடிகர் சூர்யா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு…. பரபரப்பு தகவல்…!!!!

நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்து இருந்தார்.

நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக் குழுவினருக்கும் தனக்கும் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து, வரும் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட பாமக மற்றும் வன்னியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |