Categories
உலக செய்திகள்

இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதிக்கு…. மர்ம நபர்களால் நேர்ந்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்…..!!!!

1999 ஆம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1999 ஆம் வருடம் டிசம்பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அதாவது 170 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்ட விமானம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு சென்றது. அவ்வாறு விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் இந்திய சிறைச்சாலைகளில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

அதை ஏற்றுக்கொண்ட இந்திய அரசு மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை ஒப்படைத்துவிட்டு பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை மீட்டது. இந்நிலையில் நாட்டையே உலுக்கிய இந்த விமான கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஜாகூர் இப்ராஹிம் கடந்த 1 ஆம் தேதி பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் ஜாகூர் இப்ராஹிம் பர்னிச்சர் கடை நடத்தி வந்த நிலையில், கடந்த 1- ஆம் தேதி அவரது கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டு வீழத்திவிட்டு தப்பி ஓடினர். இதனால் பலத்த காயமடைந்த ஜாகூர் இப்ராஹிம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை என்றும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருவதாகவும் கராச்சி நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |