காவல் துறையில் காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக காவல் துறையில் காலியாக உள்ள 444 SI காலிப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் www.tnusrb.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. இதற்கான வயது ,கல்வித்தகுதி மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட விபரங்கள் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் பதிவு துவங்கியது. இந்த பதிவுக்கு ஏப்ரல் 7ஆம் தேதி கடைசி நாளாகும். தகுதியான நபர்களுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு , உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடக்க உள்ளன.முதன் முறையாக 100 மதிப்பெண்களுக்கு தமிழ்மொழி தகுதி தேர்வு நடக்க இருக்கிறது. இதில் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். எழுத்து தேர்வுக்கான தேதி ஜூனில் அறிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்களுக்கு உதவி செய்ய சென்னை எழும்பூரில் உள்ள சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மாவட்ட எஸ்பி அலுவலகங்களில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை உதவி மையங்கள் செயல்படும்.மேலும் விபரங்கள் அறிய விண்ணப்பத்தாரர்கள், 044 – 4001 6200; 044 – 2841 3658 மற்றும் 94990 08445; 91762 43899 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, வாரியம் அறிவித்துள்ளது