அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ஈரான் விண்வெளியின் திட்டத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு “நூர்” என்கிற செயற்கைக்கோளை ஈரான் முதன் முறையாக விண்ணில் செலுத்தி, தன் சொந்த விண்வெளி திட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்தியது.
ஆனால் அதன்பின் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பும் ஈரானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. சென்ற சில நாட்களுக்கு முன்பு கூட ஈரான்நாட்டின் செம்மான் மாகாணத்திலுள்ள இமாம் கமேனி விண்வெளித் தளத்திலிருந்து ஒரு செயற்கைக் கோளை ராக்கெட் வாயிலாக விண்வெளியில் செலுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் பல்வேறு தோல்விக்கு பின் நேற்று (மார்ச்.8) 2-வது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானின் வடகிழக்கில் உள்ள ஷாரூத் பாலைவன பகுதியிலிருந்து “நூர்2” செயற்கைக்கோள் ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டதாகவும், அந்த செயற்கைக்கோள் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாகவும் ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.