நாமக்கல் கால்நடை மருத்துவம் கல்லூரியில் புதுசாக பண்ணை வளாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மீன்வள மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழக மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுத்து வருவதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் தொடர்ந்து கடிதம் எழுதியும், வெளியுறவுத்துறை மந்திரியை தொடர்பு கொண்டு பேசியும் வருகிறார் என தெரிவித்தார். ஆகவே விரைவில் தமிழக மீனவர்கள் பயமின்றி மீன்பிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.