மதுரை அண்ணாநகரில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை, அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் சாலையில் அமைந்துள்ள ஏ.டி.எம் மையத்திருக்கு இரவு நேரம் மர்ம நபர் ஒருவர் சென்று அதை உடைத்து உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் பணத்தை எடுக்க முடியாமல் திரும்பி சென்றுள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த வங்கி மேலாளர் பரசுராம் பட்டி கங்கா நகரை சேர்ந்த சம்சுதீன் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.