Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பிரதமர் மோடியால் தான் முடியும்…. இந்திய மாணவர்கள் மீட்பு…. மாநில தலைவரின் பரபரப்பு பேச்சு…!!

உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு இருக்கும் மதிப்பினால்தான் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டனர் என்று பா.ஜ.க மாநில தலைவர் கூறியுள்ளார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று 85-வது இந்து சமய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அரசியல் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியுள்ளார்.  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது என  அண்ணாமலை கூறியுள்ளார். இதனையடுத்து ரஷ்யாவுக்கும்  உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வருவதால் அங்குள்ள இந்திய  மாணவர்களை மீட்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது என்றும், இதுவரை 12 ஆயிரம் மாணவர்களை மீட்டுள்ளது எனவும், அதில் 1500 பேர் தமிழக மாணவர்கள் எனவும்  கூறியுள்ளார். இவர்களை உலக அரங்கில் பிரதமர் மோடிக்கு இருக்கும் மதிப்பினால் மட்டுமே மீட்க முடிந்தது எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து   இந்திய நாட்டின் விமானப்படை வீரர்கள் மூலமாக மாணவர்களை  மீட்டுள்ளதாகவும், உத்திரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 300 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறினார். இதன்பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் இனி கேரளாவில் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனவும் அவர் கூறினார். இதனையடுத்து ராகுல்காந்தி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருவதாகவும், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில்  போட்டியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.  அதன்பிறகு நேற்று மகளிர் தினம் என்பதால் பெண்களை தெய்வங்களுடன் ஒப்பிட்டுக் கூறி மகளிர் தின வாழ்த்துகளை கூறினார். மேலும் திருமண உதவித் தொகை, இலவச தையல் மிஷின் வழங்குதல், ஏழை குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை போன்ற பல்வேறு நல திட்டங்களை வழங்கினார்.

Categories

Tech |