கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காக, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அந்த அலுவலகத்தை மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கையை கண்டித்து சி.இ.டி.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. மேலும் மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்தை உடனடியாக ராமநாதபுரத்திலேயே செயல்பட நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து கோரிக்கையை நிறைவேற்றவிடில் ஒட்டுமொத்த தொளிலாலர்கல்ம் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் அய்யாத்துரை தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட செயலாளர் சிவாஜி, தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் பலரும் பங்கேற்றனர்.