Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாட்டை துரைமுருகன் ஜாமீன் ரத்து செய்யப்படுமா?…. வழக்கை ஒத்தி வைத்த கோர்ட்..!!

சாட்டை துரைமுருகன் ஜாமின் மீதான வழக்கு 17ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் சாட்டை துரைமுருகன் என்பவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றியும், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும், யூடியூப்பில் தவறான வீடியோக்களை அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று  மதுரை நீதிமன்றத்தில்  மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவை ஏற்று கொண்ட நீதிமன்றம் துரைமுருகனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. இந்த நிபந்தனையை மீறி மீண்டும் அவதூறு பரப்பும்  வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகவும் இதனால் அவருக்கு கொடுத்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர் .

இந்த  வழக்கை முன்னதாக நீதிமன்றம் விசாரித்த போது, யூடியூப் சம்பந்தமான விவரங்களை திரட்டி கோர்ட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று வக்கில் ராமகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும்  யூடிபில் தேவையில்லாத  பதிவுகளை தடுக்க என்ன முயற்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்றும், அதற்கான சாத்தியக் கூறு என்ன என்பதையும், அரசு சார்பில் பதிலளிக்க  வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, யூடியூப் நிறுவனம் மூலம் பல லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது.  இதன் மூலம் பல நன்மைகளும் இருக்கின்றன ஆனால் அதை பலர் தவறாக பயன்படுத்துகின்றனர். ஆதலால் யூடியூப் குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய வக்கீல் ராமகிருஷ்ணனுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மறுபடியும் இந்த வழக்கு 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |